3 ஏப்ரல், 2009


இற்றுப் போனதோ ஈழம் ?இன்னுமென்ன மிச்சமிருக்கிறது இங்கே?,
குண்டுகள் தின்று போட்ட
எச்சங்கள் தவிர ?.

சருகாகச் சரிந்து வீதியில்
விழுந்து கிடக்கிறோம் ...
சாவகாசமாய்
தூதரகம் இங்கே தூது வரும்
நேரமும் இதுவோ?.

பிறந்த குழந்தை
பீரங்கிக்கு இரையாகின்றது...
பிய்த்துக்கொண்டு வாராதோ
பேராவேசம் ?.

தினம் விடிந்தால்
ஐயோ !.....
எங்கள் பிள்ளைகளின்
பிணங்களைத்
தேடிச் செல்வதே
பிழைப்பாகி விட்ட பின்னே,
போர்க்கொடி தூக்கவும்
ஏதிங்கே நேரம் ?.


4 கருத்துகள்:

logu.. சொன்னது…

manasu valikkirathu...

Vasanth சொன்னது…

hard feeling

புதியவன் சொன்னது…

வரிகள் முழுதும் வலிகள்...

THANGAMANI சொன்னது…

காலச்சக்கரம் சுழன்றுகொண்டே உள்ளது.
விரைவில் விடியல் பிறக்கும்