12 ஏப்ரல், 2011

என்னுள்ளே என்னுள்ளே


மனம் தடுமாறும் மாற்றங்கள் என்னுள்ளே
சுகம் தாங்காமல் துரத்தும் சந்தோசங்கள் என்னுள்ளே
மிருகமும் கடவுளும் மாறி மாறி என்னுள்ளே
சட்டென பலப் பல சலனங்கள் என்னுள்ளே
பல நேரம் பரவசம் என்னுள்ளே

இந்த மனதோடு போராடி பொசுங்கிக் கிடக்கிறேன்...
இதமாகவும் பேசிப் பார்த்தாகி விட்டது,
அதட்டியும் அடக்கி வைத்து பார்த்தாகி விட்டது.
உணர்ச்சியின் உச்சம் போகிறேன் என் மனதை
மரணிக்க வைக்கும் போராட்டத்தில்.

அசிங்கம் இது கூடாதென்றது ஊர்,
தவறு இது செய்யாதே என்றனர்.
எனக்குப் புரிகிறது பல நேரம் "உங்களுக்காக மட்டுமே"
வாழ வேண்டும் என்று,
ஆனால் மனதை என்ன செய்ய? எங்கு தூக்கி வீச?

இந்தச் சமூகம் நினைக்கவே தடை போட்ட
செயல்களெல்லாம் மனதில் தினம்
நடக்கிறது, சொல்லிப் பார்த்தேன் சமூகத்திற்காக.
சட்டென யோசித்துப் பார்த்தேன்.....
சமூகம் தள்ளி,
மனதை விட்டு விட்டேன் அதன் வழியில்.

கருணை ஒதுக்கவில்லை,
காதல் வராமல் போகவில்லை,
மனதில் ஈரம் கசியாமலும் இல்லை,
அற்புதம் இல்லாமல் இல்லை.
அதன் பின்னும்.

கருத்துகள் இல்லை: