30 மார்ச், 2009

காதலன்

நம் முதல் பார்வை
முட்டி விழுந்த
இடத்தை நித்தம்
சுற்றி அழைக்கிறேன்.

ஆனால்,
எனக்கு மட்டும் நீ
ராத்திரி நேரத்து
சூரியனாக
ரகசியமாகவே இருக்கிறாய்.

மூச்சுக்குத் தவிக்கும்
முதியவன் போல,
உன் முகம் காணத்
தவிக்கிறேன்.

பேருந்து நேரத்தில்
தூரத்து மரமாய்,
உன் நினைவில்
ஒடுகிறதடா
என் நினைவு.


கருத்துகள் இல்லை: