30 மார்ச், 2009

என் காதல்

நினைத்துப் பார்க்கின்றேன்
என் நினைவுக்குள்
அவன் வந்த
அந்த ஒற்றை நாள் அதனை.....
சின்னதாய் சிலிர்த்துப்போகிறேன்
இன்றுகூட.

காட்டு வெள்ளம் போல்
அவன் நினைவு - என்
உள்ளுக்குள்
எல்லை தாண்டிப் போகின்றது ......

சிரிக்கின்ற அவன் நினைவு
எதை எதையோ
என்னுள் இடம் மாற்றி
விட்டுப் போய் விட்டது.

இன்றோ ..........
கடக்கும் மனிதரிலும்,
கிடக்கும் பொருள்களிலும்
அவன் நினைவே நிற்கின்றது.

கருத்துகள் இல்லை: