30 மார்ச், 2009

மழலை

அவனோடு நானிருக்கும்
நாழிகைகளில்,
அவன் நினைவோடு
நின்றிருக்கும் பொழுதுகளில்,
எங்கெங்கோ சுற்றிச் சேர்த்த
அறிவெலாம் அழிந்து
அவன் போலவே
நானுமாகிறேன்.மெல்ல... மெல்ல .....
அவன் நடக்கும் போதும்,
எதைப் பார்த்தாலும்
சிரிக்கும் போதும் .....
சிரிக்க மறந்து இறந்த
என் உதடுகளும்
பூத்துப் பூத்துச் சிரிக்கின்றன.

அவன் பேசும் பிழை மொழியும் .......
அழகாய் சோறு அல்லும்
அவன் பிஞ்சு விரல்களும்.........
இன்னும் எத்தனையோ
அவன் செயல்களும் .............

உள்ளிருக்கும் என்
கருணையைக் கரம் பற்றிக்
கூப்பிடுகின்றது.
கருத்துகள் இல்லை: