30 மார்ச், 2009


படைத்தவனே !
கல் உடைத்தே
நொறுங்கிவிட்டேன் !

குப்பைகள் தேடியே
காணாமல் போனேன் !

பிச்சை கேட்டே
செல்லாக்காசாகி நிற்கிறேன்!

ஆசைக் கனவுகள் எல்லாம்
கண் முன்னே வேகின்றது,
சிரித்து மகிழ்ந்து
நாள் பலவாகின்றது ......

முன் கூட்டியே
என்னை வைத்து
அவசரமாய் நாட்டை
முன்னேற்றும் முன்னேற்பாடா ?.

போகட்டும் விடு கடவுளே,
கோரிக்கை வைத்தெல்லாம்
உன்னை மந்திரி ஆக்க மாட்டேன்
கவலை வேண்டாம்.

ஆனால் இறைவனே!
இனியாவது மட்டும் ஈர
இதயம் கொண்டு
படைத்தல் செய்!.
கருத்துகள் இல்லை: