31 மார்ச், 2009


என்னை ரசிக்க வைத்தவனே!

உறுத்தும் உறவுகளெல்லாம்
இனிப்பாயின;
காணும் முகங்களெல்லாம்
கடவுலாயின;
பார்க்கும் காட்சிகளெல்லாம்
கோவிலாயின.

காரணமே இல்லாத
களிப்பில்
உள்ளமும், நானும்
ஊரிக்கிடக்கிறோம்.

தேவை இல்லாமல்
கிடந்து, கிடந்து......
மக்கி உரமாகி,
உருவின்றிப் போனது மனது.

சொல்லத்தெரியாத ஏதோ
இன்பத்தில் நான்....

பார்க்கின்ற ஒரு
தூசியில் நான்
லயித்துக் கிடக்கிறேன்
என்றால்
படைத்தவன் கருணையன்றி
வேரென்ன ?.


கருத்துகள் இல்லை: