31 மார்ச், 2009


நானும் அவனும்

எந்தன் நெஞ்சுக்குள்
தூரத்தில் தெரியும்
உந்தன் நிழல் முகம் கண்டு
குழந்தை போல்
ஆனந்தம் மிகக் கொண்டு
காத்திருக்கிறேன்.

எனக்குள்ளே - நாம்
வாழ்ந்த நாட்களை
மனதுக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்.

எத்தனையோ மாற்றங்களை
விட்டுப் போனாய் என்னுள்ளே...

யாருமில்லா தனியறையில்
திரும்பி நான் அதைப்
புரட்டும் போது...
வார்த்தைகளில்லாமல்,
மொழிகலில்லாமல்,
ஆனந்தப் பெருக்கில்
நான் அழுவது மட்டும்
தொடர்கின்றது.1 கருத்து:

vinu சொன்னது…

silla nearangalil naam ennathaan kattupaduthinaalum manam keatpathillai azavaikkum ninaivugallukku pinnaleayea odugirathu eanna panna thozhi