தேவனைக் காணாமல்........
கடினமாக அதட்டவில்லை மனதை
யாசகம் தான் கேட்கிறேன்
அதனிடம் என்னை.
இடமிருந்தது இளைப்பாற, .....
வாசல் வழியும் வெளிச்சமாக, ....
அதனால்
நானென்னவோ அந்த
வெளிச்சத்தில் விழுந்து விட்டேன்.
ஏனோ மனமென்னை
விடாமல் இழுத்து
வீதியில் தள்ளி
வேடிக்கை பார்க்கவே
துடிக்கிறது நாள் முழுதும்.
இந்த வேதனை தாழாமல்,
தேவனைக் காணாமல்....
என் தவிப்பை
யாரிடம் சென்று சொல்ல?.
1 கருத்து:
//இந்த வேதனை தாழாமல்,
தேவனைக் காணாமல்....
என் தவிப்பை
யாரிடம் சென்று சொல்ல?. //
வரிகளில் தவிப்பை உணர முடிகிறது...
தயவு செய்து வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்து விடுங்களேன் பின்னூட்டமிடுவதற்கு சுலபமாய் இருக்கும்...
கருத்துரையிடுக