கடவுளாக சில நேரங்கள்....
இடையில் வந்து என்னை
இளைப்பாற வைத்தவனே!
செத்துப்போன என் நெஞ்சுக்குள்
செந்தேனாய் சுவைப்பவனே!
என்னுள் நீ விழுந்தவுடன்
பூக்கள் என்று இல்லை பூச்சிகளும்
புளகாங்கிதம் தருகின்றன.
சந்தோஷத்தில் பலவேளை
சாப்பாடும் மறக்கின்றது.
சுற்றிச் சுற்றி கண்ணில்
விழுவதெல்லாம்
அற்புதமாய் இருக்கின்றது.
உயிர்களெல்லாம்
பரவசமாய்.......
அவனின் இந்த நினைவுகளை
எல்லாம் எழுத்தில்
சிக்க வைக்கும் முயற்சியில்
மூழ்கும் போதெல்லாம்
பல கோடி ஆனந்தம் வந்து
பாடாய்ப் படுத்தித் தடுக்கின்றது.
1 கருத்து:
//என்னுள் நீ விழுந்தவுடன்
பூக்கள் என்று இல்லை பூச்சிகளும்
புளகாங்கிதம் தருகின்றன.//
ரசித்தேன் இந்த வரிகளை...
கருத்துரையிடுக