28 ஜூலை, 2009

கடவுள்

வெற்றுக் காகிதம் போல
கேட்பாரற்று
மிக மிக அந்நியமாய்
என்னோடே நான் .....

தேவைகளும், வாழும் நிபந்தனைகளும்,
தேடல்களும், இல்லாமல்
ஆனால் .....
நிமிடங்கள் எல்லாம்
என்னுள் எதையோ தேடி......

தேடும் ஆர்வம் அதிகமாக.....
முகம் காணாமலே,
ஸ்பரிசம் படாமலே,
என்னுள் நீ பூத்து விட்டாய்!.

குப்பையோடு ஒன்றாய்
மாறிப்போன என்னை
ஓவியம் தீட்டி
தினம் நீயே அழகு பார்த்து
வியந்து நிற்கிறாய்!.

உன் காதலில் மட்டுமே
நான் கிடக்கிறேன்...
தினம், நீ என்னை வரையவோ
இல்லை கிறுக்கவோ என்று .....

வெற்றுக் காகிதம் போல
கேட்பாரற்று
மிக மிக அந்நியமாய்
என்னோடே நான் .....