24 ஜூன், 2009

கருணையில் விட்டு விட்டேன்....

நடைபாதை சந்திப்பில்
தென்படும் முகங்களோடு
பகிர்ந்து கொள்ளும்
சாதாரண உணர்வுகளுக்கு தூரமாய் ....

கலாச்சார விதிகளும்,
வீதிகளும் கடந்து
உயிர்ப்பும், உருவமும் கடந்து,
தனித்து விட்டு விட்டேன்
விருப்பத்தோடு தனிமையில்
நான் என்னை...

தாய்க்கும், எதிரிக்கும்
மழலைக்கும், மிருகத்திற்கும்
பேதம் காட்ட
தெரியாத கருணை
என்னுள்
அடிக்கடி எட்டிப் பார்ப்பதால் ...

தனித்து விட்டு விட்டேன்
விருப்பத்தோடு
தனிமையில் நான் என்னை.

கருத்துகள் இல்லை: