24 ஆகஸ்ட், 2009

சிவத்துள் சிக்கும் நிமிடங்கள்

வார்த்தைகள் கடந்த
உணர்வில்
வரையறை செய்ய
தெரியவில்லை எனக்கு
உந்தன் இருப்பை....


கண்ணை மூடினால்
காதலிலும்,
கருணையிலும்
எந்தன் நிமிடங்கள்
நகர்கின்றது......

மனிதர்களைப் போலவே
மரங்களோடும்,
உயிரில்லா பலவோடும்
சிரிப்பை பரிமாறிக்கொண்டு
நகர்கின்றேன்.

நான் மிக மிக
அழகாய் இருக்கிறேன்
நீ என்னோடு இருக்கும்
போதெல்லாம்.

8 கருத்துகள்:

KRISHNAMOORTHY.S.R சொன்னது…

Good

ஆறாம்பூதம் சொன்னது…

நன்றாக இருக்கிறது...

தேவன் மாயம் சொன்னது…

நான் மிக மிக
அழகாய் இருக்கிறேன்
நீ என்னோடு இருக்கும்
போதெல்லாம்.///

நல்லா இருக்கு வரிகளும்!! அழகாகவே இருங்கள்!!

க. தங்கமணி பிரபு சொன்னது…

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

வானம்பாடிகள் சொன்னது…

/வார்த்தைகள் கடந்த
உணர்வில்
வரையறை செய்ய
தெரியவில்லை எனக்கு
உந்தன் இருப்பை..../

ம்ம். நல்லா இருக்கு.

வானம்பாடிகள் சொன்னது…

எழுத்துச் சரிபார்ப்பை எடுத்து விடலாமே. உங்கள் படைப்புக்கான பின்னூட்டங்கள் இழக்க நேரலாம்.

பெயரில்லா சொன்னது…

அர்த்தம் பொதிந்த வரிகள் ..மிக நன்று ..தொடர்க .. வாழ்த்துகள்..

என்னுடைய புதிய பதிப்பிற்கு வருகை தருக .. கருத்துக்களை விட்டுச் செல்க

littlebharathi சொன்னது…

migavum nandraga ullathu...yaar ungalai miga miga azhagai matrikondu irupathu?