3 அக்டோபர், 2009

சலனமில்லாமல்


உங்களை சற்றே
சலனப்படுத்தி விட்டு
பதட்டப்படாமல்
வழக்கம் போல் கடந்து செல்லும்
சக மனிதனின் சாவு ....

எங்கோ..... கதறும்
கடைசி அழுகுரல் சத்தம்,
காதுக்கு வந்துவிட்டு
ஏமாற்றமாய்
காற்றோடு காற்றாய்
கரைந்து போகும் கணங்கள்.

பிணங்களோடு வாழ்க்கை,
தப்பித்து வந்த வேகத்தில்
தவற விட்டு வந்த
என் பிஞ்சுக் குழந்தை,
பிய்ந்து போன என் ஈழ தேசம்.

சில வருடங்கள்
முன்பு வரை
எங்களையும் சற்றே
சலனப்படுத்தி விட்டு
பதட்டப்படாமல்
வழக்கம் போல் தான்
கடந்து கொண்டிருந்தது
சக மனிதனின் சாவும்.


9 கருத்துகள்:

KRISHNAMOORTHY.S.R சொன்னது…

Good

க. தங்கமணி பிரபு சொன்னது…

உலகின் முதல் மனிதனுக்கும்,கடைசி மனிதனுக்கும் யார் சகமனிதன்? ஈழம் - நம் முகமூடிகளையெல்லாம்
பொசுக்கி விட்டது! நல்ல கவிதை! வாழ்க!

கேசவன் .கு சொன்னது…

/// தப்பித்து வந்த வேகத்தில்
தவற விட்டு வந்த
என் பிஞ்சுக் குழந்தை ///

:)-

பெயரில்லா சொன்னது…

மிகவும் ஆழமான, அருமையான கவிதை..

நன்றி..

சக்தி சொன்னது…

eela vali innum manathirkkul.. vidiyalukkaga kaathirupom..

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

அழகான கவி வரிகள்

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in