3 செப்டம்பர், 2010

காதலோடே சாகும் வரை .....


பாதை மாறி, விட்டு
விலகிப் போனாலும்
வெளிச்சமாய்,
நான் போகும் இடமெங்கும்
வழி காட்டிக் கொண்டே இருக்கிறாய்

வேண்டாமென்றாலும்,
உதறி உமிழ்ந்த பின்னாலும்
சிறு பிள்ளை போல சிரித்துக் கொண்டே
என் முன்னால் வந்து நிற்கும்
போதெல்லாம் என் சுயத்தையே
உன் பொருட்டு
இழக்காமல் இருக்கவே முடிவதில்லை .

முட்டி மோதித் தான்
நம் உறவை உதறி விட்டேன்
ஆனாலும் விழி நீராய்,
செத்து விடும் மன நிலைகளில்
உன் மடி மீது சிறு பிள்ளையாய்,
காண்பதும், உண்பதும், அனைத்திலும்
என்ன செய்தும் என்னால் உன்னை
பிரிக்க முடியாமல் ....

உன் கருணையோ...காதலோ...
மிகப் பெரும் பிரமாண்டாமோ ....
எதுவோ என் உணர்வும், நானும்
ஊறிக் கிடக்கிறோம்.

இருப்பான உன்னிலேயே
இருக்கும் நிமிடங்கள் கழிய வேண்டும்
என்றே கரையும் கணங்களெல்லாம்
விழிப்போடே தொடர்கின்றது என்னோடு .....

4 கருத்துகள்:

logu.. சொன்னது…

Priyangal apdithaan..

oru pothum avatrai kalaikkavo..
azhikkavo mudivathillai..
avatrode sernthu suyangal tholaithu
mannodu serumvarai.

vinu சொன்னது…

me seconduuuuuuuuuuuuu

vinu சொன்னது…

காண்பதும், உண்பதும், அனைத்திலும்
என்ன செய்தும் என்னால் உன்னை
பிரிக்க முடியாமல் ....

ennaalum ...........

KRISHNAMOORTHY.S.R சொன்னது…

Long time Before Very superrrrrrrrr