5 செப்டம்பர், 2010

இசையே.......

மனம் பேசும் பேச்சுக்கள் 
உள்ளுக்குள் தினம் 
கேட்கும் போதெல்லாம்
கொஞ்சம் நிறுத்தி வைக்க ஆசைப்படுவேன்...

ஏதோ ஒரு பொருளற்ற ஒலி,
சுவையாக இருக்க வேண்டுமே என்று
ஏதோ ஒரு வகை ராகம், 
மூடிய கண்களோடு, இசைவாய் 
என்  உணர்வுகளில் 
விழ வைத்துக் கொண்டு இருக்கும் போது....

யாரோ பேசுவது கேட்கிறது,
வாகனங்களின் இரைச்சல்,
வீசும் காற்று ,
சண்டை போடும் ஏதோ ஒரு கூட்டம்,
எல்லாமும்
அதே இசை உணர்வாகவே....

காரணம் புரிந்து கொள்ள விருப்பமில்லை.
ஆனால்,
மனமென்னுள்
அற்புதமாய் மாறவே விருப்பம். 5 கருத்துகள்:

vinu சொன்னது…

nalla irrukkunga kavi, unga kaviyum

vinu சொன்னது…

iiiiiiiiiiiiiiiiii me the firstuuuuuuuuuuuuu

logu.. சொன்னது…

\\காரணம் புரிந்து கொள்ள விருப்பமில்லை.
ஆனால்,
மனமென்னுள்
அற்புதமாய் மாறவே விருப்பம். \\

Puriyamal irukkumvarai
nallathuthanga.

Purinja romba kastapadanum.

logu.. சொன்னது…

romba zhaga irukku
unga varigal.

logu.. சொன்னது…

ithuku ean padam podala?