7 செப்டம்பர், 2010

சத்தியமாய் !!!!

மாறி, மாறி 
நெஞ்சுக்குள் 
சிறகடிக்கும் 
எத்தனையோ கனவும்,
நினைவும் ...

ஆசையாகச் சேர்த்து வைத்திருக்கும் 
வங்கிப் பணம்.....

விரும்பி, சுற்றம்
மறந்து சிரித்துச், சிரித்து
லயித்துக் கிடக்கும் 
கவிதை நாட்கள்.....

பனித்துளியின் 
ஸ்பரிசம் உணரவே 
தினம் வெற்றுக்
கால்களோடு 
நடக்கும்  வயல்கள் ....

எந்தன் இனிய ரசனைகள், 
அசிங்கங்களும்,
அற்புதங்களும்,
ஓயாமல் துரத்தி
வரும் என் எண்ணங்களும்,

சாவென்பதே
எனக்கு இல்லை என, 
வாழ்கையின் பாதி நாட்களை  
பணம் தேடியே சாகடிக்கும் 
சங்கடமான சூழ்நிலைகள்,

சொத்துக்காக சொந்தங்களை
உதாசீனம் செய்யும் 
மனதின் அவலங்கள்.....

இவையெல்லாம் 
பொருளற்றவையாகிப் போனது 
நேற்று இறந்து போன 
என் தந்தையின் மரணதோடே......

8 கருத்துகள்:

poorni சொன்னது…

Entha varikalin unmayana unarvukalai, yennal unara mudikirathu sakothariye....

Oru nimitam kannir sintha vaithathu entha varikal.....

logu.. சொன்னது…

\\இவையெல்லாம்
பொருளற்றவையாகிப் போனது
நேற்று இறந்து போன
என் தந்தையின் மரணதோடே......\\

....

vinu சொன்னது…

sorry பா கொஞ்சம் late ஆயுடுச்சு அதுக்குள்ளே ரெண்டு பய புள்ளைங்கவந்து seat போட்டுடாங்க

kavi சொன்னது…

இதென்ன பஸ் ஆ வினு? சீட் போட.

KRISHNAMOORTHY.S.R சொன்னது…

Very Nice I like it

பால்ராஜ் சொன்னது…

எதார்த்தமான உணர்வுகள்!

meenu சொன்னது…

ullathai urukkum arumaiyana varikal... Realy very nice...

சாதாரணமானவள் சொன்னது…

முகத்தில் அறையும் உண்மை...