29 டிசம்பர், 2010

உனக்குள் நான் விழுந்தால்

உனக்குள் தான்
என் கனவும்...
துக்கமும்....
காதலும்....

நீ ஒருவன் மட்டுமில்லை
என்றால்
என் உணர்ச்சிகள் எல்லாம்
என்னை தீக்குள் தள்ளி
வேக வைத்தே தின்றிருக்கும்.

மனம் செத்த
நாட்களெல்லாம்
கண்களும், கால்களும்
உன்னை தேடியே!

சற்றே உனக்குள் நான் விழுந்தால்
அன்பும், கருணையும்
என்மேல் கொட்டும் போதெல்லாம்
உன்னைக் கட்டி கொண்டு
கதறாமல் இருப்பதெப்படி  ?

3 கருத்துகள்:

logu.. சொன்னது…

wovvvvv...

super..

logu.. சொன்னது…

\\சற்றே உனக்குள் நான் விழுந்தால்
அன்பும், கருணையும்
என்மேல் கொட்டும் போதெல்லாம்
உன்னைக் கட்டி கொண்டு
கதறாமல் இருப்பதெப்படி\\

Athu therinja ulagathula paathi per santhosama iruppanga.

vinu சொன்னது…

nalaaaaaa irruku; ada nallaaa irrrukunga; ada nijamaalume nallaaa irrukungaa