17 மார்ச், 2011

மீண்டும் குழந்தையாக

அட எப்படி போகிறது என் இந்த 
அர்த்தம் கேட்ட அழகான வாழ்வு ?
மிக பிரமாண்டம் என்னுள்ளே ......
ஆழமான அதிசயங்கள் என்னுள்ளே.....
பெரும் அதிர்ச்சி என்னுள்ளே.....

இவை எதனுடனும் சிக்கிக் கொள்ளாமல்,
பட்டு மாட்டிக கொள்ளாமல்,
ரகசியமாய் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளவே 
மனம் நினைக்கிறது..

நானென்ன பைத்தியமா?
நானென்ன கடவுளா?
நானென்ன மற்றவர்களை விட 
மாறுபட்டவளா ?
இயல்பாகக் கூட நடக்கத் தெரியவில்லையே ?
அழகாகக் கூட பேச முடிவதில்லையே?
இப்படியே யோசித்து யோசித்து 
என் பல வருடங்களில் பாதி போய்விட்டது..
போய்ட்டு போகுது போ......

போ என் அனைத்தும் 
விட்டுப் போ என் அனைத்தும் 
போ என்னை வெறுமையாக்கி  விட்டு 
மீண்டும் குழந்தையாக என்னை விட்டுப் போ.... 








4 கருத்துகள்:

logu.. சொன்னது…

\\மீண்டும் குழந்தையாக என்னை விட்டுப் போ....\\

அஸ்கு புஸ்கு..
ஆச..தோச..

logu.. சொன்னது…

ம்ம்.. நல்லாருக்குங்க கவிதை எல்லாமே..

vinu சொன்னது…

wt happen sudden break in bloggs;

this one good paa;

but keep posting at regular;

சாதாரணமானவள் சொன்னது…

As usual, Cute like you :-)