26 ஜூன், 2011

மனம் பற்றி பேசத் 
தொடங்கினால் 
தெரிந்தவறென்ன ?
முகம் தெரியாதவர் தானென்ன?

சிலர் பைத்தியமென்பார்,
சிலர் தொல்லை என்பார் 
என் மனம் அசிங்கமோ, அற்புதமோ 
கல் வீசிப் பார்த்து 
அதில் சலனம் காணப் போவதில்லை,
சலனமே இல்லாவிட்டாலும்  நான் 
செத்துப் போவதும் நிற்கப் போவதுமில்லை.


காமம் உணர 
வேண்டும்.......
காதல் வேண்டும்.......
இல்லையில்லை
சொந்தங்கள்
என்னை மதிக்க வேண்டும்,........
பின் பணம் வேண்டும் ..........
பின் புகழ் வேண்டும்..........

அட என்ன இது ..!!!
வயதானாலும்
காமம் குறையவில்லை
மோகம் மறையவில்லை

எங்கு தவற விட்டேன்,
எங்கு தொலைத்துவிட்டேன்,
என்னை.
செத்துப் போய்
கண்டு பிடித்தேன் என்னை.

பொறுக்கி வேறு
உத்தமன் வேறா ?
எல்லாம் சும்மா ...
ஊருக்கு மட்டுமே
உத்தமன்.


விட்டுப் போன 
என் வாழ்வை 
வெறி கொண்டு 
வாழ்ந்து பார்த்தேன்.

அசிங்கமும் 
அழகும் ஒன்றாய்..! 
தாயும் பேயும் 
ஒன்றாய்.!!


(இந்தக்   கவிதையில் அழகோ,
பொருளோ, ஏதும் 
தேடாதீர்..
புரிந்தால் படியும், இல்லையேல் 
புரிந்ததை மட்டும் எடுத்துக்  கொள்ளும்,
ஏன் என்றால் எனக்கானது மட்டும் இவை அனைத்தும்)

2 கருத்துகள்:

logu.. சொன்னது…

\\பொறுக்கி வேறு
உத்தமன் வேறா ?
எல்லாம் சும்மா ...
ஊருக்கு மட்டுமே
உத்தமன்.
\\

Sathiyamana varththaigal.

logu.. சொன்னது…

\\(இந்தக் கவிதையில் அழகோ,
பொருளோ, ஏதும்
தேடாதீர்..
புரிந்தால் படியும், இல்லையேல்
புரிந்ததை மட்டும் எடுத்துக் கொள்ளும்,
ஏன் என்றால் எனக்கானது மட்டும் இவை அனைத்தும்)\\

Ellorukkum porunthum.
aanal ellorum vazhnthu parpathillai.