13 ஆகஸ்ட், 2011

காலம் போகிறது,
நேற்று நடந்த பாதச் சுவடினூடே
பயணம் நீள்கிறது.....

கவிதை கூட
தூரமாய்ப் போனது,
ரசனை கூட சாரமின்றி  ஆனது,

எவையெல்லாம் இல்லாமல் 
இருக்க முடியாது என மனம் 
எண்ணினேனோ,
அவை அனைத்தும் 
சத்தமில்லாமல் 
என்னை கழற்றி விட்டுப் போயின,

உருகி அழுத நாட்கள்
போயின போயின,
உணர்ச்சியில் தழும்பிய
காலங்கள் கழன்றன, கழன்றன...

உணர்ச்சியில் ஊறிய
உணர்வை
உரித்தெடுப்பதின்
வலியை அறிவீரா?