4 செப்டம்பர், 2011

உணர்ச்சிகள் கட்டற்றுப் போனால் பித்தேறும்.
மனம் நிற்க மறுதலிக்கும்.

அப்பப்போ கட்டவிழ்தல்........
தொட்டுக் கொள்ளும் 
ஊறுகாய் போல. சும்மா பெயருக்கு 

வருகின்ற பித்து 
காட்டாறு போல அடித்துப் போகட்டும் 
அனைத்தையும்.

சரியா, தப்பா
வேண்டுமா, கூடாதா
பிழைப்பேனா, மாட்டேனா
என்றெல்லாம் யோசிக்காத 
மனதுக்கும் 
புழுவிலிருந்து கடவுள் வரை
தேங்கிக் கிடக்கும்
என் சகதியைக் கழுவ 
காட்டாறு வரட்டும்


கருத்துகள் இல்லை: