காக்காச்சி, மிய்யா குட்டி, மய்யம் (மரம்)
இவை எல்லாம்
சில நாட்களாக
என் நண்பர்கள்....
கடவுள் பற்றி தேடல்
மறந்து...
காக்காச்சி வீடு
எங்கே இருக்கும்
எனும் தேடலோடு
என் பயணம்
என் சிறு பிள்ளையோடு
தவழ்ந்து போகிறது...
பறவை பார்த்தால்
பைத்தியம் போலே
என் சிறு பிள்ளையோடு
ஆசை மிகக் கொண்டு
அதன் மிச்சம் மறையும் வரை
பரவசப்பட்டு
பார்த்துக் கிடக்கிறேன்
1 கருத்து:
பகிர்தலுக்கு நன்றி.
கருத்துரையிடுக