24 ஏப்ரல், 2013

வெற்றுக் காகிதமாய் 
நிரம்பாமலே 
சென்று கொண்டிருக்கிறது  
என் பக்கங்கள் பலதும்....

வேலைப் பழுவென 
விடப்பட்ட பக்கங்கள் பல....
தேவை இல்லாத வேலை என்று 
நிறுத்திய இடங்கள் பல....


எழுதப்பட கவிதைகள்  
பல காத்திருக்கிறது....
தினமும் பூக்கள் பறிக்க 
செடிகள் நடப்பட உள்ளது....

இவ்வாறிருக்க அடுப்பெரிக்க 
தருவேனா இந்தக் காகிதங்களை?

1 கருத்து:

Unknown சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கவிதை.., வாழ்த்துக்கள்!