1 ஏப்ரல், 2009

முதுமை

காலம் கொஞ்சம்
கண் அயர்ந்திருந்தால் கூட
நானும் அந்த
பள்ளிக்கூடத்துப்
பிள்ளை போலத் தான்
இருந்திருப்பேன் இன்று.

ஆகிப்போனது
ஆண்டுகள் அறுபது.....

கரை ஒதுங்கிக்
காத்திருக்கும் காலங்கள்
இனிய இனிய
அனுபவமாய்தான்
நெஞ்சில் வந்து
இனித்துக் கிடக்கின்றது.

ஏதும் தெரியாத
அன்று;
ஏதோ அனுபவம் கொஞ்சம்
இன்று;
புரியாமல் வாழ்ந்த
அன்று;
புரிந்தும் வாழமுடியாமல்
இன்று;

நின்று நிதானித்துப்
பார்க்கிறேன்.....
வித்தியாசம்
சிறிதும் இருப்பதாய்
விளங்கவில்லை எனக்கு.

ஆனால்
இந்த உச்சிக் கோபுரத்தின்
உயரத்தில் நின்று கொண்டு தான்
உலகத்தை ரசித்துக் கொண்டு
இருக்கிறேன்.




3 கருத்துகள்:

littlebharathi சொன்னது…

life needs a rewinding button

புதியவன் சொன்னது…

//ஏதும் தெரியாத
அன்று;
ஏதோ அனுபவம் கொஞ்சம்
இன்று;
புரியாமல் வாழ்ந்த
அன்று;
புரிந்தும் வாழமுடியாமல்
இன்று;//

நிதர்சனமான வரிகள்

ivingobi சொன்னது…

ஆகிப்போனது
ஆண்டுகள் அறுபது.....
aiyaiyo.... naan vaera ungala pher solluren..... sry madom.... LOL...