30 ஜூலை, 2009

கருணை விழும் நேரங்களில்.....

எட்டயபுரத்து பாரதி
என் கண்ணில் பட்டிருந்தால்
காலில் விழுந்தாவது
அவனின் காக்கைச் சிறகினிலே
வரிகளை கடன் வாங்கி இருப்பேன்.

காணும் உயிரிலெல்லாம்
கடவுள் தெரிகிறான் ....
பார்க்கும் இடங்களெல்லாம்
அவனாய் இருக்கிறான் .....

தினம் தினம்
என்னுள் வந்து
அவசர அவசரமாய்
அற்புதங்கள் செய்து
நான் கேட்பதை எல்லாம்
செய்து தர
ஆசை மிக கொண்டு
காத்துக் கிடக்கிறான்
என்னுள்ளே .....

பிரியம் மிக வைத்திருக்கிறான்
என்மேலே.
அவன் கருணை
என்மேல் கொட்டும்
தருணங்கள் எல்லாம்
பைத்தியம் போலல்லாமல்
வேறெந்த நாகரிகமும்
என்னுள்
எட்டிப்பார்ப்பது கிடையாது.

3 கருத்துகள்:

ஐந்திணை சொன்னது…

nice

துபாய் ராஜா சொன்னது…

நன்றாக உள்ளது.

passerby சொன்னது…

கட்வுளுக்குத்தான் என்ன ஓர வஞசனை?

விரைவில் ஓடிவந்து ‘அவசர அவசரமாக அற்புதங்கள்’ செய்து. ‘கேட்பதையெல்லாம் கொடுத்து விட்டு, அப்புறம் காத்து வேற கிடக்கிறான்!

அப்படி நீங்க என்னதான் செய்தீங்க கடவுளுக்கு? பசி, பட்டனி, வறுமை, வன்கொடுமை என ஊசலாடும் உயிர்களைக் க்ண்டுகொள்ளாத கட்வுள் உங்களிடம் வந்து கேட்டதெல்லாம் கொடுத்து அவசரவச்ரமாக அற்புதங்கள் செய்து காத்துக்கிடக்கும்படி, எப்படி கடவுளையே விலைக்கு வாங்கி அடியையாக்கிகொண்டீர்கள்?

அதை பாவப்பட்ட ஜனங்களுக்கும் சொல்லிகொடுத்தால், உங்கள் கடவுள் உங்களை விட்டு அவர்களிடம் போய் காத்துக்கிடப்பார் என அச்சப்படுகிறீர்களோ?

இரக்க குணம் வேண்டும் தாயே. பாரதியாரிடமிருந்து திருட ஆசைப்படும் நீங்கள் அவரிடமிருந்த பாவப்பட்டோருக்கு இரங்கும் குணத்தையும் திருடப்பாருங்களேன்!