அழகான வேளை
அற்புதப் பொழுது
ஆண்டவன் வந்தான்
சொர்க்கம் தந்தான்
எனக்கென உலகம்
செய்தான்,
முடிந்த பின்
என்னுள்ளேயே வந்தமர்ந்தான்
சகதி கண்டேன்,
சாக்கடை கண்டேன்,
பூவைக் கண்டேன்,
புழுவைக் கண்டேன்,
சேயைக் கண்டேன்,
நாயினைக் கண்டேன்
உத்துப் பார்த்தேன்
உரக்கச் சிரித்துக் கிடந்தான்
அனைத்திலுமே
3 கருத்துகள்:
"அற்புதப் பொழுதில் ஆண்டவன் வந்தான்" Nice, keep going...
mmmmm..
epdiyo varam kodutha sari..
Super. Nice feel.. Keep it
கருத்துரையிடுக